நாங்கள் மாகாணசபையைக் குழப்பவில்லை: நான்கு உறுப்பினர்கள் சம்பந்தனுக்கு தன்னிலை விளக்கக் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் சபையினைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதில் ஒரு உறுப்பினரை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த உறுப்பினர் அல்லாத நான்கு உறுப்பினர்களினால் கை ஒப்பம் இடப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்று...

விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது. பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட...
Ad Widget

மக்கள் போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்புறப்படுத்தமை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக கணிப்பிடப்பட்டுள்ளது. வழமை போன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன், சிறீதரன் போன்றோர் தமது சொகுசு வாகனங்களில் வந்திறங்கி கைகளில் எடுத்து வந்த பேனர்களை பிடித்தவாறு மக்கள் போராட்டத்தினை வழிநடத்த...

பணத்திற்கு காணியை வழங்காவிட்டால் இரண்டையும் இழக்கும் நிலை உருவாகும்: கடற்படை!

அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5...

மாணவனைத் தாக்கியதில் செவிப்பறை பாதிப்பு!!! 3 ஆசிரியர்கள் விளக்கமறியலில்!

சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைத் தாக்கியதால் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் கல்விகற்கும் குறித்த மாணவனை அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் அடித்ததில் மாணவனது செவிப்பறை பாதிப்படைந்து...

பொருளாதார மையம்: உண்ணாவிரத போராட்டம் நிறைவு

வவுனியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை, தாண்டிக்களத்தில் அமைக்கக் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம், முதல் நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. வட மாகாண சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம், தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் எனவும் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ‘உதவிப்பாலம்’

மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ்...

பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும்! விக்னேஸ்வரனே முடிவை எடுப்பார்!!

வடக்கு மாகாணத்தின் பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரனே முடிவு எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் கிடையாது என கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைக்க 20 கோடி ரூபாவை...

வேக்ககட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தூர் - வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை 3.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வேக்ககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்றவர்கள் மோதிக் கொண்டு வீதியோர மதில் சுவரையும் உடைத்துக் கொண்டு உட்சென்றது. இதில் வீதியில் நின்ற ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தில் மட்டுவில்...

மஹிந்தவும் டக்ளஸுமே படுகொலைகளுக்குக் காரணம்! அமைச்சர் விஜயகலா

எனது கணவர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் கடந்த அரசும் (மஹிந்த அரசு), ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுமே காரணம் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "கடந்த அரசு செங்கோலை வைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தது....

ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு!

புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய...

மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கிய அதிபர்!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்....

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துவோம்! ஓமந்தையில் விவசாயிகள் பேரணி

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை ஓமந்தையில் அமைக்க வலியுறுத்தியும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்து வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடிய விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் மன்னார் வீதி வழியாக...

ஜெனிவாவில் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர் பிரதிநிதிகள்

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இலங்கை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வட மாகாண சபை...

பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரால், இமையாணன் மேற்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நற்குணம் லிசாந்தன் (வயது 22) என்ற இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், நேற்று திங்கட்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் பயன்படுத்திய அலைபேசியிலிருந்து மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அநாமதேய அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இது...

பல்கலை மாணவர்கள் 331 பேருக்கு தடை

அம்பாறை - ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள் 331 பேருக்கு, அப் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த மாட்டோம் என, ஏனைய பீடங்களிலுள்ள அனைத்து மாணவர்களும் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், முகாமைத்துவத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மாத்திரம் அதற்கு இணங்கவில்லை என,...

நாமல் விசாரணைக்கு வராதன் காரணம் தெரியுமா?

அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை 09.30க்கு அவரை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது வரை நாமல் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வரவில்லை என, அதன் பேச்சாளர் ஒருவர்...

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பிற்கு எதிர்ப்பு

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 4...

போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!

இலங்கை, அதன் இராணுவ படைகளை கட்டுப்படுத்துவதோடு, போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களான ஒரு பயனுள்ள இடைக்கால நீதி பொறிமுறையின் கீழ், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், என,...

இலங்கையர்களின் ஆயுட்காலம், அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

இலங்கையர்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், 2001ம் ஆண்டு மேற்கொள்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் படி ஆண்களின் எதிர்பார்க்கும் ஆயுட் காலம் 68.8 வயதாக காணப்பட்டதுடன் பெண்களுக்கான ஆயுட்காலம் 77.2 வயதாக நிலவியது. இதேவேளை, 2011 தொடக்கம் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆண்களின்...
Loading posts...

All posts loaded

No more posts