யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழைக்குப் பின்னர், தோல் வியாதிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினரால் வீடு வீடாகச் சென்று ஆண், பெண், சிறுவர்கள் உட்பட வீடுகளில் தங்கியுள்ளவர்களை உடற்பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை (16) காலை நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் இவ் உடற்பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மழை காலத்தின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் நோய்கள் இனங்கண்டால் மருத்துவமனையினை உடன்நாடல் போன்ற பல்வேறு விளக்கங்களையும் இவர்கள் பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர்.