- Tuesday
- August 11th, 2026
யாழ்ப்பாணத்தில் லட்சுமி மிட்டல் நிறுவனத்தினால் நிறுவப்படவிருந்த பொருத்துவீட்டுத் திட்டத்தினைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு வருகைதந்திருந்த உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த வீட்டுத்திட்டத்திற்குப்...
இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது. யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை...
நேற்று சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வீட்டிற்கு பயணம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றயதினம் துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அன்றைய தினம் தனது மகளின் பிறந்தநாளாகையால் வீட்டுவருமாறு சரவணபவன் அழைத்திருந்தார். இந்த அழைப்பையேற்ற சிறீலங்கா அதிபர்...
தனித்தனியாக இயங்கும் ஆறு அரசாங்க வங்கிகளை ஒன்றிணைத்து மூன்று புதிய வங்கிகளை உருவாக்கப்போவதாக அரசாங்கத்தின் பொருளாதார பேரவை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அரச ஈட்டு, மற்றும் முதலீட்டு வங்கியுடன் இலங்கை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இணைக்கப்படவுள்ளது. அத்துடன், லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி பிரதேச அபிவிருத்தி வங்கியுடனும், திவிநெகும வங்கி இலங்கை சேமிப்பு வங்கியுடனும் இணைக்கப்பட்டு...
வவுனியா மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிக்குளம் வீதியில், சாம்பல்தோட்டத்துக்கு திரும்பும் சந்தியில் சனிக்கிழமை பிற்பகல் 1.30க்கு இடம்பெற்ற விபத்தில், நெலுங்குளம் அரசாங்க வீட்டுத்தொகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த சுதாநாதன் வனஜா( வயது 34) மரணமடைந்துள்ளார். அந்த சந்தியில் வவுனியா...
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண், ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 44 அகதிகள்...
"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கடும்போக்காளர்கள் சிலர் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றபோதும் தற்போதைய அரசின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் ஒருபோதும் பாதிப்படையாது." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தியாவின் உதவிகளுக்குப் பெரு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர்...
பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைக்கப்படவிருந்த சமயத்தில் மேடை ஏறிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில், மேடையில் நின்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால பதறிப் போய் முதலமைச்சருக்கு அருகில் செல்ல முற்பட்ட வேளை அங்கு நின்ற அதிகாரிகளால் முதலமைச்சர் தூக்கி விடப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனது வேட்டி தடுக்கி கீழே விழுந்தாரா?...
கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாக கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது. தற்போது துரையப்பா விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று (18) சனிக்கிழமை...
வவுனியாவைச் சேர்ந்த தமிழரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்)...
யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை...
இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர். யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த...
யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோன துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஒட்சிசன் வழங்கவேண்டிய நிலையில்இ விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் இருக்கவில்லை. இதுவே குழந்தை மரணமடையக் காரணம்...
தேசிய பரீட்சைகளாகிய புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஆகியன ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெற உள்ளமையால், தம்மைத் தயார்ப்படுத்தும் மாணவர்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் யாழ் குடாநாட்டில் உள்ள...
பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மஹியங்கனை - ரிதிமாலியெத்த - மோரான பிரதேசத்தில் 9 வயதான மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பாடசாலையில் இருந்து 2.5 கிலோ மீற்றர் தூரம் அளவில் இவரின் வீடு உள்ளதாக தெரியவந்துள்ளது.இதனோடு அவர் செல்லும் பாதை ஆள் நடமாட்டமில்லாத பிரதேசம்...
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு...
கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணியாற்றினால் அந்த நிறுவனம் தடை பட்டியலுக்குள் சேர்க்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் சுகாதார சேவைகளுக்கான கட்டணத்தை 20 வீதம் அதிகரிக்குமாறு தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....
Loading posts...
All posts loaded
No more posts
