தனித்தனியாக இயங்கும் ஆறு அரசாங்க வங்கிகளை ஒன்றிணைத்து மூன்று புதிய வங்கிகளை உருவாக்கப்போவதாக அரசாங்கத்தின் பொருளாதார பேரவை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் அரச ஈட்டு, மற்றும் முதலீட்டு வங்கியுடன் இலங்கை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இணைக்கப்படவுள்ளது.
அத்துடன், லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி பிரதேச அபிவிருத்தி வங்கியுடனும், திவிநெகும வங்கி இலங்கை சேமிப்பு வங்கியுடனும் இணைக்கப்பட்டு மூன்று புதிய வங்கிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.