மாணவர்களை கௌரவிக்க மறுத்த பாடசாலை அதிபருக்கு அழைப்பாணை!

மாணவர்களை கௌரவிக்க மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபரின் செயற்பாட்டால், குறித்த கல்லூரில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாணவர்களின் பெற்றோரால் மனித உரிமை...

சாதனை முயற்சியில் வடக்கு இளைஞர்கள்!

இயற்கையை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை வளமாக்குதல் தொடர்பில் ஓரே நாளில் இலங்கையை சுற்றி வரும் விழிப்புணர்வு பயணத்தினை இரு இளைஞர்கள் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் மற்றும் இமயவன் ஆகிய இரு இளைஞர்களுமே ஓரே நாளில் 1320 கிலோ மீற்றர் பயணம் செய்து இலங்கையை சுற்றிவர...
Ad Widget

திருவள்ளுவர் சிலைகளை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு

இந்திய-இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து திருவள்ளுவரின் 16 சிலைகள் இலங்கைக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய, இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலங்கையில் நிறுவப்பட உள்ள இந்த சிலைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் இந்த சிலைகள் விரைவில்...

திக்கம் வடிசாலையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஏற்பாடு

கடந்த சில வருடங்களாக இயங்காத நிலையில் இருக்கும் திக்கம் வடிசாலையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றில் சிலவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் திக்கம் வடிசாலையை இயக்கிவரும் வடமராட்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியின் இயக்குநர் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (20.06.2016) இடம்பெற்றது....

இறுதி யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள்; த கார்டியன் தகவல்

இறுதிக்கட்ட போரில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் (cluster bombs) (AO-2.5RT, RBK-500 AO-2.5RT) வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக த கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில்...

பொருளாதார மத்திய நிலையம் இடம்மாறினால் முதலமைச்சருக்கெதிரான போராட்டம் வெடிக்கும்!

வவுனியால் அமைக்கப்படவுள்ள பொருளதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு மாறிச்சென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றுக்கொள்ளவேண்டுமென வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் திட்டம் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் முதலமைச்சருக்கெதிரான போராட்டம் வெடிக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உள்ளூர்...

பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பேரூந்துக் கட்டணங்கள் 3.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேரூந்துக் கட்டண அதிகரிப்புத் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனையடுத்து கட்டண உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா நயவஞ்சக நாடகம்!

மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜகட்டத்தில் நாதுராம் கோட்சே படத்தைத் திறந்து வைப்பதுபோல் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரைச் சூட்டி, வண்ணங்கள் மிளிர வரையப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனியர்...

புதிது புதிதாக கோவில்களை அமைப்பது பயனற்றது வறியோருக்கு உதவுங்கள் : முதலமைச்சர்

இருக்கின்ற கோவில்களில் வழிபாடு செய்வதற்கு மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தின் 31வது ஆண்டு விழாவும் அமரர் சி. சிதம்பரப்பிள்ளை ஞாபகார்த்த கலைவாணி கலையரங்கு திறப்புவிழாவும் நேற்றைய தினம் துணைவி, சங்கரத்தையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக...

நெசவுப் பாடசாலைக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன. இந்தக் கற்கைநெறிக்கு 6 மாதகாலம் மற்றும் 1 வருட காலம் என்று இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளனர். ஒரு வருட கற்கை நெறியைப் பயிலுவதற்கு, க.பொ.த. சாதாரண தரப்...

சிறுமி கொலை : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

மஹியங்கனை - ரிதீமாலியத்த - மொரான பிரதேசத்தில் ஒன்பது வயது பாடசாலை மாணவியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதனடிப்படையில் , குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீடு வரும் வழியில் வைத்து அவரை கடத்தியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.பின்னர் சிறுமியின் உணவு பெட்டியில் சுற்றப்பட்டிருந்த துணியை கொண்டு அவரின் வாயை கட்டியுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான...

சுசந்திகா வேறு நபருடன் வீட்டில் இருந்தார்! அதனால்தான் தாக்கினேன்!- கணவர்

குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில்...

வடக்கில் இன அழிப்பு இடம்பெறவில்லை: சரத்பொன்சேகா

இராணுவத்தின மீது படிந்துள்ள கறைகளை அகற்றவும் வடக்கில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்பதை நிரூபிக்கவும், தற்போது காலம் வந்துள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யத்தக்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்தவது நாட்டிற்கு மேலும் அழுத்தமாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா...

மாணவி துஷ்பிரயோகம் : அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

தென்மராட்சி - வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

இரண்டு மாதங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார். புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும் உள்ளடக்கிய உயிரியல்...

இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளின் விபரங்களை விஜயகலாவிடம் கோரினார் ஜனாதிபதி!

வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தனியார் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருக்கும் இடங்கள் குறித்த விபரங்களைத் தன்னிடம் தருமாறு சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலாவிடம் சிறீலங்கா அதிபர் கோரியுள்ளார். கடந்த சனிக்கிழமை புனரமைப்புச் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்தபோது சிறுவர் விவகார அமைச்சர்...

படுகொலைகளைச் செய்த படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்படும் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விட்டுக்கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரியவிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சந்தித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சத்ஹண்ட சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு...

எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை!

கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்ட போது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது, பெரும்பான்மை பாடசாலைகளுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது, ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே எமது கல்வியின்...

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உட்பட மூவர் சடலமாக மீட்பு

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன் (வயது 22) மற்றும் உதயகுமார் சசிதரன் (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நயினாதீவு அம்மன் ஆலயத்தின்...

குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வாராம் மஹிந்த

தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அந்த நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவ்வாறு சில சந்தர்ப்பங்களில் குற்றம்சுமத்தியுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட மஹிந்த, தான் ஒரு...
Loading posts...

All posts loaded

No more posts