- Wednesday
- August 12th, 2026
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்...
வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். சண்முகம் செல்வராசா (வயது 55 ) என்ற வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், தனது வீட்டு வாசலில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.வாகனமொன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டதாக...
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தேசிய கொள்கை தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதாகவும் அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவையென்றும் போக்குவரத்து அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு முன்வைத்த கோரிக்கைக்கு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கமைய, பஸ் கட்டணத்தை 15 சதவீதத்தினால்...
சபையின் நேற்றையதின பிரதான நடவடிக்கைகள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சபையில் பல தடுமாற்றங்கள் நிலவியதை அவதானிக்க முடிந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர் பலரும் தடுமாறிப் பேசினர். அவைக்குத் தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபாநாயர் அறிவிப்பு முதல் அக்கிராசனத்திலிருந்து தான் எழுந்து செல்லும் வரையிலான சகல நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளையும் தமிழ் மொழியிலேயே...
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (21) 'வெரிகுட்', 'வெரிகுட்' (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர். நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின்...
ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக"விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்" பேணப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில்...
மருந்துகளின் விலையை குறைப்பதற்கான வழிவகை ஒன்றை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் புதிய தலைவர் அசித டி சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி குறைந்த விலைக்கு அதி சிறந்த தரத்துடனான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் படி அவர் அறிவுரை வழங்கியுள்ளார். அசித டி...
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில்...
இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கள் காணிகளில்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வௌியான செய்திகளுக்கு, அரசாங்கம் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த அறிக்கை பற்றி ஆராய்வதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்...
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் காணிகள் கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் தற்போது நாட்டில் சட்டம் காணப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில்...
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பிரபல பாடசாலையில் 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபரிற்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை...
இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு...
முல்லைத்தீவு-பரந்தன் வீதியில், வட்டுவாகல் பாலத்தில் ஒரு ஆணின் சடலம் காணப்படுகின்றது. சிவப்பு, மற்றும் நீல நிற டீசேட்டும், நீல நிற சாரமும் அணிந்துள்ள குறித்த ஆண் விபத்து ஒன்றில் உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் குறித்த ஆண் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் உந்துருளி நீரினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் துரித கதியில் சீனியின்...
தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிகள் அந்தஸ்து கோர முயற்சித்தால் அவர்களைட் திருப்பி அனுப்புவோம் என்று ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 ஈழத் அகதிகள் ஒரு வார ஜீவ மரண போராட்டத்துக்குப் பின் இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க...
கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக...
அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்கு சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமியை நிந்தவூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்....
இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். கும்பகோணத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியாவுக்குள் ஈழத் தமிழர்களை அனுமதிக்காதது வேதனைக்குரியது. மனித நேயம் இல்லாமல் இந்தோனேசியா அரசு நடந்துள்ளது. இப்பிரச்சினையில்...
Loading posts...
All posts loaded
No more posts
