- Wednesday
- August 12th, 2026
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான...
வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன. விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்யை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென கோரியே இவ் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை வவுனியா றோயல் காடின் மண்டபத்தில்...
பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய...
வவுனியாவில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பிரபல அரிசியாலையான எஸ்.எஸ். ஆர் அரிசி ஆலையின் உரிமையாளரான சண்முகம் செல்வராசா நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டார். அரிசி ஆலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிந்த சந்தர்ப்பத்திலேயே வீட்டிலிருந்து 10 மீற்றர் தொலைவில் வைத்தே அவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நேற்று...
தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் விஜய்குமார் ஐ.பி.எஸ். இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக...
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில்...
இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்கு, ஏறத்தாழ 1.15 பில்லியன் ரூபாயை (65 மில்லியன் குரோனர்) வழங்குவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே தெரிவித்தார். இந்த உதவி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக (யு.என்.டி.பி) வழங்கப்படும் எனவும்,...
மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில்...
126 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் 300 கிராம் கஞ்சாவுடன் மற்றொரு நபரையும் யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குருநகர் சவற்காலை சந்தியில் வைத்து, அதே இடத்தினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் 126 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், சொலமன் வீதி...
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன...
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும்...
போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளாமையைக் கண்டித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே உள்ளக விசாரணையைக் கருத்தில்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணைகள்மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை....
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், 1984ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயரும்போது அக்காணிகள் அனைத்தும் அவர்களுடையதாயிருந்தது. அதுமாத்திரமின்றி 1984ஆம் ஆண்டு அந்தக் காணிகளே...
இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக...
வேலை வாய்ப்பு மற்றும் சிறுதொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த மதிப்பீடுகளை அமெரிக்காவின் மிலேனியம் சவால்களிற்கான தொழில்நுட்ப ஆய்வுகூட அதிகாரிகள் ஆராய்ந்து சென்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பொறுப்பாளர் நஸ்ரீன் மரிக்கார் (Nazreen Marikkar Political Specialist Embassy of the united...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவுத்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி வித்தியா வண்புனர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவுத்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன நிலையில் வித்தியாவின் தாயார் சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தபட்ட வழக்கு இன்று...
யாழ்.காங்கேசன்துறை வீதியில் உள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த...
சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள்...
நல்லிணக்க அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றவேண்டும். குறிப்பாக காலதாமதமின்றி மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலை வரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது...
இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம்...
Loading posts...
All posts loaded
No more posts
