பொலிஸாருக்கு கசிப்பு விற்றவர் கைது

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்ற அச்செழு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை புதன்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு வாங்குபவர்கள் போல, சிவில் உடையில் பொலிஸார் சென்றுள்ளனர். 200 ரூபாய் பணத்தைக் கொடுக்க சந்தேகநபர், 750 மில்லிலீற்றர் கசிப்பை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது, அந்நபரை...

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மரணம்!

யாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்ரதத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தாவடி காளி கோவிலடியினைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்னும் மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியில் இருந்த பாதசாரிக்...
Ad Widget

தென்னிந்திய படங்களை பார்த்தே யாழில் குண்டர் குழுக்கள் உருவாகின: பகீர் தகவல்!

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களே யாழ்.குடா­நாட்டில் “ஆவா குறூப்”, “ரொக்டீம்” போன்ற குண்டர் குழுக்கள் உரு­வாக கார­ண­மாக உள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாஹல ரட்­நா­யக்க தெரி­வித்தார். 23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யிலேயே அமைச்சர்...

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாள் விளக்கமறியல்

மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நகர்ப்புறப் பாடாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை சாவகச்சேரி நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது, கடந்த 15 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்புறப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிற்கும் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனைத் தாக்கியபோது குறித்த மாணவன் காயமடைந்த...

16 பெண்களுடன் திருமணம் 36 பிள்ளைகள் ; இலங்கையில் இந்த நிலை!

திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கேகாலை பகுதியைச்சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து...

யாழ் போதனா வைத்தியசாலையின் சாதனை!!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பெரும் சாதனையொன்றுநிலை நாட்டப்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, வலது கையின்மீது...

வற் வரி செலுத்தவேண்டியவர்கள் யார்? அரசாங்கம் அறிவிப்பு!

ஒரு மாதத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்குக் குறைவாகவும், ஒரு நாளைக்கு 33ஆயிரத்தை விடக் குறைவாகவும் வருமானத்தைப் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்கள் வற் வரியில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் எவரையும் குழம்பத் தேவையில்லையெனவும், வரி கட்டாதவர்களே தேவையற்ற முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற...

யாழில் ஐந்து வருடத்தில் 74 கொலைகள், 184 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

2016 ஜனவரி முதல் மே 19 வரை யாழ். குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50,000ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு முதல் 19.05.2016 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் 74 கொலைகளும், 184...

புற்றுநோயாளிகளுக்கு வரையறையின்றி செலவிட முடிவு

புற்றுநோயாளர்களுக்கு வரையறையின்றி நிதியை செலவிட நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். புற்றுநோயாளர் ஒருவருக்கு இதுவரை அரசாங்கம் 15 இலட்சம் ரூபாய் நிதி செலவிட்டதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், இதுபோன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளமையால், குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது குறித்து...

வடமாகாணத்தில் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்குவது என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த...

யாழ். ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று நேற்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது. நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து...

ரயில் மோதியதில் இளம் பெண் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இன்னசிற்றி ரயில் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.45 மணிக்கு இடம்பெற்றது. கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட இராமாவில் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே பலியானவராவார். சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி...

ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காணியை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து...

வங்கியில் வழங்கிய பணம் போலி: பெண் முறைப்பாடு

மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றினால் தனக்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய் நாணயத்தாள்கள் போலியானது' என்று கூறி, இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை (23) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண் ஆனைக்கோட்டையிலுள்ள தனது தங்கையின் திருமணத்துக்காகச் சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட அவசர பணத்தேவை காரணமாக, தனது தாலிக்கொடியை...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வைத்திய பரிசோதனை

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்

பட்டா ரக வாகனம் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் ஒருபடுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். வண்ணார் பண்ணை சிவன் கோவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த தேவராசா நிரோசன் (வயது 17) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார். யாழ். மத்திய...

கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன

வடமாகாணத்தில் கடந்த காலத்தில் அசாதாரண சூழல் காரணமாக (போர்காலத்தில்) கால்களை இழந்த 310 பேர்களுக்கான மாற்றுக்கால்களை வழங்கும் நிகழ்வு இன்று யாழ் இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவி துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் மாவட்ட ரொட்றிக் கழக ஆளுநர் பி.வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் யாழ்...

கொத்து குண்டு விவகாரம்- ராஜித்த கூறிய பதில் இதுதான்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளித்துள்ளார். குறித்த வியடம் தொடர்பில் பல்வேறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வௌியான போதும், அது கொத்து குண்டுகளா என்பதோ, இலங்கை இராணுவம் அதனை பயன்படுத்தியதா என்பதோ தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

மாணவிகள் ஐவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

யாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டார். ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள்...

“Free யா?” பாடல்

யாழ்ப்பாணத்தில் இருந்து TKS Production மற்றும் Universal Entertainment உருவாக்கத்தில் Free யா? பாடல் வெளியாகியுள்ளது. இயக்கம் - சுஜீந்திரனின் ஒளிப்பதிவு - வின்சன் குரு Editing - ஜெய் லோகேந்திரா நடன அமைப்பு -R.H.Jans கலை அமைப்பு - சாரங்கன் பாடலை எழுதிப் பாடியுள்ளார் நவாலியூர் கபில்ராஜ் இசை- சிவன்ஜீவ் சிவராம்.
Loading posts...

All posts loaded

No more posts