- Wednesday
- August 12th, 2026
நுவரெலியா மாவட்டம் மது பாவனையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில், மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (26) காலை 10.00 மணிக்கு நுவரெலியா...
சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர்...
“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடமாகாண முதல்வர், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது” என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...
வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற...
பம்பலபிட்டிய பிரதேசத்தில் ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். பேலியகொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, வெள்ளவத்தையில்...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட...
தனியொரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர மற்றும் விடுமுறை நாள் விசேட வகுப்புக்களை பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா...
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, காயமடைந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மத்திய வங்கியின் ஆளுநருக்கு பதவி நீடித்து வழங்கக் கூடாது மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில்...
கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்...
வவுனியா தீருநாவல்குளத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காணமல் போன நபர், நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேசன் வேலைக்காக சென்ற தீருநாவல்குளத்தை சேர்ந்த பாக்கியநாதன் ஜஸ்டின் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக மனைவியினால் வவுனியா பொலிஸில் புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வீதியில் அமைந்துள்ள...
நகையை அடகுவைத்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2 இலட்சம் ரூபாய், போலி நாணயத்தாளாக வழங்கப்பட்டது என பெண் ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார், மூவரைக் வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார்,இன்று...
வாழ்வின் எழுச்சி சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு குறித்து யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் ஆ. மகேஸ்வரன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மீளாய்வுக் கூட்டத்திற்கு பிரதம விருந்திரனாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொண்டு,...
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் போதைப் பொருள்...
தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று முன்தினம் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள்...
வெளிநாடுகளில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் பணிப்புரையின் கீழ் அவ்வாறானவர்களுக்கான கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள்...
தகவலறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதானது கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவதைப் போன்றது. இந்தச் சட்டமூலத்தினால் எதிர்க்கட்சியினருக்கே அதிகமான நன்மை கிடைக்கப் போகிறது என வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பல உலக நாடுகள் தமது இரண்டாவது ஆட்சிக் காலப் பகுதியிலேயே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. எனினும்...
தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்களை சூறையாட சிலர் முயற்சிப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன்போது வடமாகாணத்துக்கு கிடைக்கப்பெறவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு...
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்....
அச்சுவேலி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெருமாள் சிவகுமார், வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். தழிழ்நாடு மாநிலம் நாகப்பட்டிணம் பகுதியில் இருந்து ஒரு படகுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களின் படகு எரிபொருள் தீர்ந்துள்ளது. இதனால்...
Loading posts...
All posts loaded
No more posts
