என் மீது தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவிய தமிழர்களை மன்னிக்க முடியாது

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில், கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல்...

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. குறித்த குழுவில் 16 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 4799 அகதிகள்...
Ad Widget

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ம்...

வலிகாமம் வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபவனி

வலிகாமம் வடக்கு பகுதிகளிலுள்ள தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரி, மக்கள் இன்று நடைபவனியொன்றை மேற்கொண்டுள்ளனர். மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் நல்லூர் ஆலய முன்றலில் கூடி, அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நல்லூர் ஆலயத்தில் கூடிய...

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால...

ஆரம்பித்தது முதல்வரிற்கு எதிரான போராட்டம்! கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் இணைவு!!!

வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை மேலும் சிக்கல்படுத்தும் விதமாக வவுனியாவில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, சிறிரெலோ கட்சிகளின் பிரமுகர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் கலந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும், ஓமந்தையில் அமைக்க முயலும் முதல்வரை எதிர்க்கிறோம் என இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

யாழில் மாணவன் இறந்த விபத்து முன் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சியளிக்கும் சி.சி.ரி.வி வீடியோ !

காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்த நிலையில் அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பட்டா டிமோ சாரதிஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சி.சி.ரி.வி கமராப் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த...

யாழில் 100 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100கிலோ கேரள கஞ்சா விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய் - அக்கரை கடற்பகுதியில் வைத்தே இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...

முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்....

யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் வீசவில்லை!– கோத்தபாய ராஜபக்ஷ!

தான் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த வேளையில் சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டுகள் வீசப்படவில்லையென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய வேளை அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனது காலத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். வெளியிடப்பட்ட ஒளிப்படங்களை...

மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் இன்று பேரணி!

மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர். மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார். இதேவேளை மயிலிட்டியை சேர்ந்த...

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடை தாண்டல் பரீட்சை!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சை ஜுலை மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற உள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அரச நிர்வாக சுற்றறிக்கை இல 16/2016 மற்றும் ஒன்றிணைந்த சேவை...

வட மாகாண தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வடக்கு மாகாணம் மற்றும் சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. வடமாகாண ரீதியில் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இணைந்த நேர அட்டவணை அமுலாக்கத்தில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க...

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையம், 27 வருடங்களின் பின் சொந்த இடத்தில்

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. இன்று வரை காங்கேசன்துறைக்கான பேரூந்து சேவையானது படிப்படியாக மீள கையளிக்கப்பட்ட பகுதியான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக்...

தெல்லிப்பளை பிரதேசத்தில் 5, 100 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கையிருப்பில்

தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன. இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த...

“இலங்கைத் தாய்க்கு தமிழர்கள் பாரமில்லை”

நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், மக்கள் அனுபவித்தது வேதனை மட்டுமே. தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழும் பூமி. உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாதுகாப்பு தலைமையகத்தினால், உயர்பாதுகாப்பு வலயம் என்ற...

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப்...

புதிய மின்சார கட்டண முறை

மின்சாரம் பயன்படுத்தும் காலத்தின் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை மற்றும் இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை என இரண்டு காலப்பகுதிகளாக...

 விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம்...

அரசுடன் நேரில் பேசுவதற்கு குழு அமைத்தது கூட்டமைப்பு!

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசுடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் குழுவொன்றை நியமித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா...
Loading posts...

All posts loaded

No more posts