Ad Widget

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் குறித்த சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல், தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts