Ad Widget

சிறுதொழில் முதலீட்டாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு

வேலை வாய்ப்பு மற்றும் சிறுதொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த மதிப்பீடுகளை அமெரிக்காவின் மிலேனியம் சவால்களிற்கான தொழில்நுட்ப ஆய்வுகூட அதிகாரிகள் ஆராய்ந்து சென்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

mile

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பொறுப்பாளர் நஸ்ரீன் மரிக்கார் (Nazreen Marikkar Political Specialist Embassy of the united States of America) தலைமையிலான எழு பேர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்த அதிகாரிகள் குழுவினர் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பின் போது, யாழ். மாவட்டத்தில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அதில் முக்கியமாக, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு இன்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த மதிப்பீடுகளை ஆராய்ந்துள்ளனர்.

கடந்த காலங்களில் முதலீடுகளை செய்த, முதலீடுகளை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முதலீட்டாளர்கள் எவ்வாறு கவரப்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே சிறு முதலீட்டாளர்களாக இருக்கின்றவர்கள் தற்போது, முதலீடுகளை செய்வதில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் மதிப்பீடுகளை பெற்றுக்கொண்டதுடன், சிறு முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்வதற்கு எவ்வாறான வகையில் ஊக்கமளிக்க வேண்டுமென்றும் அரச அதிபரிடம் ஆராய்ந்துள்ளதுடன், மதிப்பீடுகளையும் பெற்றுச்சென்றுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

Related Posts