Ad Widget

கிளிநொச்சியில் குடும்பமொன்று உண்ணாவிரதம்

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது.

hunger-strike-family

இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது.

கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts