Ad Widget

மீள்குடியேற்றத்தை தாமதித்தால் போராட்டம் செய்வோம்;வலி வடக்கு மக்கள்

கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

tellippalai-1

வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி,கா ங்கேசன்துறை, பலாலி, தையிலிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 27 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

சொந்தக் காணியில் தாங்கள் மீள் குடியமர வேண்டும் என வேண்டி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை அவர்கள் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே குணபாலசிங்கம் இவ்வாறு கூறினார்.

இனிமேலும் தங்களை மீள்குடியேற்றம் செய்யாவிட்டால் சாத்வீக ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

Related Posts