Ad Widget

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை

கல்முனை இஸ்லாமிய பெண்ணின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சின்னலெப்பை அலாவுதீன் என்பவரைக் கொலை செய்ததாக அவரது மனைவி கலந்தர் ரூபியா என்ற பெண்ணுக்கு கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்றத்தில் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த மரண தண்டனை தீர்ப்பினையே ஆயுள் தண்டனையாக்க் குறைக்குமாறு அவர் ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளார். ஒரு வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய பின்னர், அந்தத் தீர்ப்பினை வழங் கிய நீதிபதி, தண்டனை விதிக்கப்பட்டவரை, தூக்கிலிட வேண்டுமா என்பது குறித்து, தனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற சட்டரீதியான கடப்பாட்டிற்கு அமைவாகவே நீதிபதி இளஞ்செழியன் இந்தப் பரிந்துரையை செய்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது பரிந்துரையில், தனது பரிந்துரைக்கான சட்டரீதியான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, தண்டனை விதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணாகவும் 3 பிள்ளைகளின் தாயாகவும் இருப்பதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக நடைமுறைப்படுத்த வேண் டும் அல்லது ஜனாதிபதி விரும்புகின்ற குறைந்தபட்ச தண்டனையை நடைமுறைப்படுத் தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

போர்க்குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்குக் கூட மரண தண்டனை இல்லையென சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றமும் ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பிரகடனம் செய்துள்ளன. இலங்கையில் மரண தண்டனை – தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என சட்டப் புத்தககத்தில் கூறப்பட்டுள் ளது.

இருப்பினும் 1974 ஆம் ஆண்டின் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள், தூக்குத் தண்டனை ஆவணத்தில் கையொப்பம் இடாதபடியால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாத நிலை இலங்கையில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள, இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள இஸ்லாமிய பெண்ணின் மரண தண்டனையை ரத்துச் செய்து, தண்டனையைக் குறைத்து, அவர் உயிருடன் வாழ்வதற்கான சுதந்திரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கோரும் நீதிபதி இளஞ்செழியனின் இந்தப் பரிந்துரை ஜனாதிபதிக்கு நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts