Ad Widget

உதவிய அனைவருக்கும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் நன்றி

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, நிதி உதவி வழங்கிய வௌிநாட்டு மற்றும் இலங்கை மக்களுக்கு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் வை.எம்.வில்பிரட் குமாரசிறி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக விளம்பரங்களை மேற்கொண்ட தெரண ஊடக நிறுவனத்துக்கும் அவர் விஷேடமாக நன்றி தெரிவித்துள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவைப்பட்ட பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, குறித்த வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது.

இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த அந்த வைத்தியசாலையின் இந்த முயற்சிகளின் பலனாக, நேற்றுடன் மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் 20 கோடி ரூபாயை எட்டியுள்ளன.

இந்தநிலையில், இதன் பொருட்டு நிதி வழங்கியவர்கள் மற்றும் உதவிகளைப் புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள, அவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் வை.எம்.வில்பிரட் குமாரசிறி, விரைவில் குறித்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது சேவையை வழங்கவுள்ளதோடு, இது தொடர்பில் வரும் காலங்களில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு தெரியப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts