Ad Widget

சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை

அரசு எமது உரிமைகளைத் தந்தால், சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங் லியாங்கிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Capture

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது.

இரண்டு நாடுகளுக்கிடையில் சரித்திர ரீதியாக நல்லுறவு பேணப்பட்டு வந்துள்ளது.

இந்த உறவு தனித்து சில இனங்களுக்குள் இருக்காமல், முழு இலங்கையில் உள்ள அனைத்து இனங்களுக்குமிடையிலான சுமூகமான உறவாக இருக்கவேண்டும் என்பது சீன அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இலங்கைக்கான சீனா தூதுவர் சியான் லீங் தெவித்தாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கூறினார்.

அத்துடன், எங்கள் மக்களை பொறுத்தவரையில் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசியல் ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என சீன தூதுவரிடம் தான் வலியுறுத்தியதாக விக்னேஸ்வரன் கூறினார்.

சீன பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

Related Posts