- Saturday
- August 15th, 2026
வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அவருடைய பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் உயிரிழந்த பிரதி...
யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில்...
வட பகுதி மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து பார்த்தால் இதனை அறியலாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் கூறியுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், நேற்று (புதன்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்புக்களை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போது, யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறுள்ளதென ஊடகவியலாளர்களால்...
காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண...
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் எழுதுமட்டுவாள் வீதிக்கு அருகில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி வந்த பார ஊர்தியும் மோதியமையாலயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம்...
அமெரிக்க கிறீன்கார்ட் சீட்டிழுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2018 இற்கான விண்ணப்படிவங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி இரவு 9.30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையம் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த சீட்டிழுப்பின் மூலம் எழுந்தமான முறையில் தெரிவாகுவோர் நேரடியாக அமெரிக்க வீசா நேர்முக தேர்வுக்கு...
காலி ஹராபிட்டிய பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்திதுறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடைபவனியை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககார, மகேல ஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயட்சியாளர்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100 பேர் அளவில்...
வடக்கு, கிழக்கு உட்பட ஸ்ரீலங்காவின் பல்வேறு பிரதேசங்களில் நிலவிவரும் வரட்சி காரணமாக மூன்று இலட்சத்து 10 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணம், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தொடர்ச்சியான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 78 ஆயிரம் குடும்பங்களில் அதிகளவானோர்...
வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை செய்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற...
கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இணைப்புக்கள் பழுதடைந்துள்ளதால், வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளும் பொதுமக்களும் உள்ளகத்தில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த வைத்தியசாலையில் இரு வெளியக தொலைபேசி இணைப்புக்கள் உண்டு. இவற்றில் ஒரு இணைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்கு ஒரேயொரு வெளியக இணைப்பு மாத்திரமே...
யாழ் பண்பாட்டுப்பெருவிழா சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை நடத்துகின்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், யாழ்...
தேசிய ஓய்வூதியத் தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனால் இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று வழங்குவதென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்காவிடின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்போம் என வடக்கு, கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ஒன்றியத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ். புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை 10.30 மணியிளவில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து...
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். யாழ். குடாநாட்டில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலையில்...
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் குரல்கள் வலுத்துள்ளன. இருப்பினும், பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியரத்தினத்தை நியமிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள்...
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரப்போவதாக அண்மையில் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்தது புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் பயங்கரவாதத்துக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
