- Saturday
- August 15th, 2026
யாழ். இராசாவின் தோட்டம் வீதியில், 1 கிலோவும் 900 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியுடன் வீதியில் நின்றிருந்த குடும்பஸ்தரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். 45 வயது மதிக்கத்தக்க குறித்த குடும்பஸ்தர் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்காக யாழ்.மடத்தடி வீதியில் நின்றிருந்த போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த நபர்...
2016 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக:...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நாடாளுமன்றில் தெரிவித்தார். எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு, அதற்கு அரசாங்கத்திடம் பதிலை கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச்...
வடக்கில் இராணுவத்தின் பிடியில் காணப்படும் சகல காணிகளும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். காணி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே வடக்கில்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்விடயம் குறித்து விரைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”பல்வேறு...
விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையின் வடக்கே 8 கடல் மைல் தொலைவிலும், 15 மீற்றர் ஆழத்திலும் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமகனான சுழியோடி ஒருவரின் தகவலின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான வலம்புரி என்ற துருப்புக்காவி கப்பல்,...
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமஸ்டி மட்டுமே சாத்தியமான ஒரேயொரு தீர்வு என தாங்கள் நம்புவதற்கான காரணம் என்ன? பதில்:...
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்....
கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்தக் காட்டுப் பகுதிக்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க...
2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை Exam சுட்டெண்" என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலமும் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்...
அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு நேற்று நாடாளுமன்றத்தில்நிராகரித்துள்ளது. நேற்று நாடாளுமன்றம் கூடிய போது, இது குறித்து கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, அண்மையில் யாழ் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,...
புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் “புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்.அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பாதுகாக்கப்படும்.புதிய அரசியலமைப்பை உருவாக்குவற்கான...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இந்த மாத இறுதிக்குள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கின் நிலைமை தொடர்பில் மாணவி...
முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்புவது சரியாக இருக்காது என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனிற்றா சொமறுகா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தில் இருந்து ஈழ அகதிகளை நாடுகடத்துவது தொடர்பிலேயே தமது விஜயத்தில் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக...
திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் சிவன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால், நேற்றுத் திங்கட்கிழமை (03) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் நொருக்கப்பட்டுள்ளன. முகத்தைக் கறுப்புத் துணியால் மூடிக்கட்டியவாறு, 3 மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவொன்றே, இத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு,...
எந்த சூழ்நிலையிலும் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட மாட்டாது என மின்சக்கி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள நிலையில் அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 100க்கு 5 வீதமாக மின் கட்டணத்தை உயர்த்துமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் 6...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து காரைநகர் கடற்பரப்பில் படகொன்றில் வந்து மீன்பிடித்துக் கொண்டிந்த மீனவர்களே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரிடமிருந்து மீனவர்களைப்...
மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான நிலையம் மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீ லங்கா...
சிகரெட்டுக்கான விலை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை கூறியுள்ளார். இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
முதல் டெஸ்ட் போட்டியை போலவே 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் தொடரை வென்று, தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்...
Loading posts...
All posts loaded
No more posts
