விடுதலைப்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

DCIM100GOPROGOPR0110.

பருத்தித்துறையின் வடக்கே 8 கடல் மைல் தொலைவிலும், 15 மீற்றர் ஆழத்திலும் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுமகனான சுழியோடி ஒருவரின் தகவலின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான வலம்புரி என்ற துருப்புக்காவி கப்பல், 1998ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி, திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 20 சிறீலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். கடற்கொந்தளிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அப்போது அந்தக் கப்பலை மீட்கும் முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

18ஆண்டுகளாக கடலில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் கப்பலின் ஐந்திலொரு பகுதி நிலத்துள் புதைந்துள்ளது.

இந்தக் கப்பல் தற்போது மீனினங்களின் வசிப்பிடமாகவும், கடல் தாவரங்கள் வளரும் இடமாகவும் மாறியுள்ளது.

Related Posts