யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.
எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலையில் அப்பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று நடந்துள்ளது.
காலையில் பார்த்த போது, பொலிஸார் தேடி வந்ததாக கூறப்படும் சந்தேகநபரின் வீட்டின் மதில் சுவரில் துப்பாக்கியால் சுட்ட அடையாளமும், சன்னமும் காணப்பட்டுள்ளது.