- Thursday
- August 20th, 2026
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைத் தடுப்பது குறித்து விஷேட அவதானத்துடன் செயற்படுமாறும், இதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து செயற்பாட்டு வேலைத் திட்டங்களை தயாரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளதாகவும், அந்த பொறுப்பை எந்தவொரு தயக்கமும் இன்றி நிறைவேற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, இவர்களில் விடுதலைப்...
கோப்பாபுலவு நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலை - சிவன்கோவிலடிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, திருகோணமலை பசுமை இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வாழ்வாதார இடங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும், தங்களின் அடையாளங்களோடு தங்களுடைய மண்ணில்...
எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, அவர் கூறியுள்ளார். மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன்...
தமிழர் தாயகத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொது அமைப்புக்கள், இன, மத, மொழி பேதங்களை கடந்து, ஒன்று திரண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ள இவ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று...
பல ஹிட்டான பாடல்களைப் பாடிய பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவிட்ட சில விஷயங்கள் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு 20ம் தேதி சுசித்ரா “தனுஷ், என்னை விட்டு விலகியிருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அதன் பின் “தனுஷ் ஒரு கடவுள்” என்றும் பதிவிட்டுள்ளார். நேற்று “கமல்ஹாசன், அரவிந்த்சாமி ஆகியோரின் மிகப்...
தனியார் வீடொன்றில் சித்திரவதை முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக குற்றம்சாட்டப்படும் பேராதெனிய பல்கலைக்கழக விவசாய பீட 15 மாணவர்களுக்கு இன்று முதல் (22 ஆம் திகதி) விரிவுரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மாணவர் ஒழுக்காற்றுக் குழுப் பொறுப்பாளர் கலாநிதி ஹிடிநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். பிரதான விசாரணை முடியும் வரையில் இவர்களது விரிவுரைத் தடை...
வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது எனவும், இணைந்த மாகாணத்தில் தமிழ் தலைமைகள் கூடுதல் அதிகாரம் கோரியதனாலேயே இனங்களுக்கிடையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை...
வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் உள்ளது...
மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகம் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். ‘தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காது தொடர்ந்தும் அரசாங்கத்தினைப் பாதுகாப்பதை விடுத்து ஓர் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன் காலநீடிப்பு வழங்குவதை முழுமையாக...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களுடைய கொள்கையுடன் உடன்பட்டு செயற்படும்வரை அவரை தமிழ் மக்களின் மாற்று...
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 153.44 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149 ரூபா 68 சதமாக காணப்படுகின்றது. டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை...
“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால்...
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும்...
எதிர்வரும் 24ம் திகதி முதல் நாட்டின் தென்பகுதியில் மழை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கரையோரப்பிரதேசங்களிலும் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவிற்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படகு ஓரளவிற்கு சரிவிற்குள்ளானதாகவும் கடற்படையினர் விரைந்து சென்று அதிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது. 20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 2017ஜனவரி மாதம் வரை யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் மொத்தமாக 578,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரவியலில் இருந்து இந்த தகவல்கள்...
இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய...
Loading posts...
All posts loaded
No more posts
