ஆணுறுப்பை குறட்டால் நசித்தனர்; பிணத்தையும் அடித்து துன்புறுத்தினர்

“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள்,...

கதிர்காமம் புனித பூமியில்அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கேஹசாப் தலைமையிலான அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலர் கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த வழிபாடுகளுக்கான நேற்று இவர்கள் கதிர்காமம் புனித பூமிக்கு வருகை தந்திருந்தனர். அமெரிக்க தூதுவர்களுடன் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சிலரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் வனவிலங்குதுறை காமினி ஜயவிக்கிரம பெரேரா வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி...
Ad Widget

சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற இலங்கையர் கைது

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பைபர் படகில் வந்த இலங்கை அகதியை உளவுப்பிரிவு பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 16ம் திகதி பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த இப்படகு இந்தியா வந்தது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மண்டபம்...

இராணுவத்தினர் தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக சந்திரிக்கா கூறவில்லை!

இலங்கை இராணுவத்தினரால் வடக்கில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எங்கும் கூறவில்லை என, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன அண்மையில் கூறிய கருத்து தொடர்பில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்ட...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...

வடக்கில் 6124 ஏக்கர் காணியை உட­ன­டி­யாக விடு­வி­க்க வேண்டும்! ஐ.நா

வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். மேலும் கரை­யோரப் பிர­தே­சங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­வதும் முக்­கி­ய­மா­ன­தாகும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் றீட்டா...

வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பையும், தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்!

காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதா?

இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவற்றைத் தாரைவார்ப்பதற்கான திட்டமொன்று இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது தொடர்பிலான உண்மை விபரங்கள் வெளிப்படுத்தப்பட...

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் கதவடைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு...

யுத்தத்தின்போது தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்: சம்பந்தன்

தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவது கட்டாயமென கேட்டுக்கொண்டார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனியாவது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தேசிய...

வடக்கிலுள்ள புத்தர் சிலை உடைப்பின் பின்னணியில் தென்னிலங்கை சூத்திரதாரிகள்!

வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அண்மையில் புத்தர் சிலை மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள குழுவொன்றைச் சார்ந்தவர்களே செயற்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறான சூத்திரதாரிகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...

சீகிரியாவில் இருப்பது ‘புலி பாதம்’ : தேரரின் புதுதகவல்

சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது...

உயிரை பறித்த கார்ட்டூன் படம்!

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய ஹ_ஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பெற்றோர் தொழிலுக்கு...

தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாட்டில் சம உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டம் நடத்துவோர் மீது இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் வரையில் தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகளை தவிர்க்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர்...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது குறித்த வழக்கின் சாட்சியாக இருக்கும் சிறுவனால் இரண்டு சந்தேக நபர்களும் அடையாளம் காட்டப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த...

வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளம்: சம்பிக்க ரணவக்க

வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) 23 கீழ் 2 இல் சிறப்புக்கட்டளைக்கு அமைய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் சமூகத்துடன் இணைப்பு!

வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் நேற்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த தேவராஜா ஜெகதீபன் மட்டக்களப்பு, றங்கசாமி நந்தகுமார் மட்டக்களப்பு, யோசப் டின்டாஸ் விவிலியன் மட்டக்களப்பு, கணேசன் துசாந்தன் மட்டக்களப்பு ஆகிய நான்கு பேரே தமது குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர். பூந்தோட்டம் புனர்வாழ்வு...

வடக்கு மாகாண விவசாய அமைச்சரை பதவி விலகுமாறு கோரிக்கை!

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வடக்கு மாகாண விவசாய அமைச்சரை உடனடியாகப் பதவி விலகுமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு...

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

விமானப்படையினர் வசமுள்ள தமது நிலங்களை மீட்பதற்கு இன்றுடன் 24ஆவது நாளாக தமது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அவர்களின் பூர்வீகக் காணிகளை அவர்களிடம் மீண்டும்...

வில்பத்தில் சேதமில்லை: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்

வில்பத்து சரணாலயத்தில் மீண்டும் குடியேறியமையால், அந்தச் சரணாலயத்துக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று, வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான வீ.ஜயதிலக்க என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஏ.ஐயூப் வழிமொழிந்தார். செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts