- Thursday
- August 20th, 2026
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார். வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும்,...
பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சு மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாண பொது நூலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று விசாரணை செய்திருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால், விசாரணைக்குழு ஒன்று...
வட மகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் தொடர்பில் உறுதிமொழியான பதில் வழங்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமென, வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது. இச் சமூகத்தினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கோரி, மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும்...
யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் புகையிரதநிலைய அதிபர் தெரிவித்துளள்ளார் இதுவரை காலமும் காங்கேசன்துறையிலிருந்து காலை புறப்படும் யாழ்.தேவி புகையிரதமும், காங்கேசன்துறையிலிருந்து மாலை வேளையில் புறப்படும் தபால் புகையிரதமும் யாழ்ப்பாணம் வரை இணைப்புச் சேவையாக நடைபெற்று வந்தது. இதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து பயணிக்கும் பயணிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும்...
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர். எனினும் இதுவரை அந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை....
தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார். கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி...
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
பளை பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்த போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் காரில் இருந்து 22 கிலோவும் 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி...
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில ஏட்டுக்கு கோத்தபாய ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா...
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கில் டெங்கு தொற்று தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தீர்மானம்...
சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முயன்ற 18பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் எனவும், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில்...
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று (23) இரவு வௌிடைப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த...
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற...
154 கிலோகிராம் கேரளா கஞ்சா விநியோகம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நடவடிக்கையில் இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் உடுத்துறை கடற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் கைது...
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...
சுமந்திரனுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல் நிலவுகின்றமையை எங்களுடன் தொடர்புபடுத்திச் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று ஆற்றிய உரை தொடர்பாகப்...
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
