என்மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதால் கேப்பாபுலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை!

என்னை அசிங்கப்படுத்தி, என்மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே தான் கேப்பாப்புலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தாம் கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ...

தென்னிலங்கை மீனவர்களால் காரைநகர் மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “காரைநகர் கடற்பரப்பில் கடந்த சில வாரங்களாக நீர்கொழும்பு, புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் பகுதியில் உள்ள கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்” என, அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்....
Ad Widget

கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த விகாரை: பிள்ளையாா் கோவில் அமைக்க மறுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி,...

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம்...

சயிடம் நிறைவேற்று அதிகாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு

மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சயிடம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தால், சமீர சேனாரத்னவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது 58) , என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயில் வசிக்கும் குறித்த அதிபர் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச்...

கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை ஒரு எளிமையான மனிதனாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் ஜனாதிபதி மைத்திரி, தமது சொந்த ஊரான பொலனறுவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து தாம் வாழ்ந்த இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். தமது கிராமத்து மக்களுடன் இன்முகத்துடன் சிரித்துப் பேசி நலம் விசாரித்த ஜனாதிபதி மைத்திரி, தாம் சிறுவயதில் வாழ்ந்த வீட்டிற்கும் சென்றுள்ளார். மற்றும் அங்குள்ள...

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக அண்மைய காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தால்,...

புதுக்குடியிருப்பில் வலுக்கிறது ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை

ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு...

யாழ்.பெரியபுலம் மகாவித்தியாலயத்திற்கு விசமிகள் தீ வைப்பு

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் சாரணர் கூடம் உள்ளிட்ட இரண்டு கூடங்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் கொக்குவில் பகுதியில் உள்ள பெரியபுலம் பாடசாலையின் சாரணர் கட்டிடத்தொகுதிக்கு இனம் தெரியாதோர் வைத்த தீயினால் சாரணர் கூடம் மற்றும் அருகிலிருந்த மாணவர்களிற்கான...

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற...

யாழ் ஊறணி கரையோரம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து தேசிய...

சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும்...

தீர்வையற்ற வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி...

ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்தார் மனித உரிமை ஆணையாளர்!

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறீலங்கா அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகின்றது என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், மாநாட்டின் ஒருபக்க நிகழ்வாக சிறீலங்காப் பிரதமர் ரணில்...

விபத்தில் ஒருவர் பலி: சாரதிக்கு விளக்கமறியல்

சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்துடன் தொடர்புடைய சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் நடராஜா (வயது 79) என்ற நபர், வீதியில் நடந்துச் சென்ற போது, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. படுகாயங்களுக்கு உள்ளான அவர், யாழ். போதனா வைத்தியசாலையில்...

வாள்வெட்டுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கீரிமலை, நல்லிணக்கபுரம் பகுதியில் சனிக்கிழமை, காணாமல் போன கஜேந்திரகுமார் கஜீபன் (வயது 10) என்றச் சிறுவன், நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளான். நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டில் இருந்து அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற சிறுவன், காணாமல் போயுள்ளான். இந்நிலையில், பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

இதய நோயாளர்களுக்கு மருந்து இறக்குமதி

இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவருக்கு இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த மருந்தை மாரடைப்பு ஏற்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டுமென, வைத்தியர்கள்...

பேஸ்புக்கில் பிரச்சினைக்குரிய விடயங்களை பதிவிடாதீர்கள்!

பேஸ்புக்கில் பதிவுசெய்கின்ற விடயங்கள், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றமையால், அவ்வாறான விடயங்களைத் தவிர்க்குமாறு, பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புத் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டமொன்றை கொண்டுவருவதைவிட, சிறுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது என, குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts