இணையத்தளத்தில் பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையைப் பெறலாம்

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) இன்று முதல், இணையத்தளத்தின் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய இணையத்தளம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு அமைவாக, இன்று முதல் www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக, பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினைச் சமர்ப்பித்து, துரிதமாகப்...

நாங்கள் சுடவில்லை: கடற்படை

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டமை பொய்யானச் செய்தி என, கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டின் கமாண்டர் சமிந்த வலாகுல​​கே தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான துப்பக்கிச் சம்பவம், இலங்கை கடற்பரப்பில் நேற்றையதினம் இடம்பெற்றிருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
Ad Widget

6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் அடித்துக் கொலை

தெரணியகல, மாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ள ஏழுவயதான பெண் பிள்ளையும், 45 வயதான மற்றுமொரு நபரும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. அவர்களின் வீட்டுக்கு நேற்றிரவு வருகைதந்த இனந்தெரியாத நபரே இக்கொலைகளை புரிந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான பெண்பிள்ளையின் தாய், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர...

வட்டுக்கோட்டையில் நேற்று வாள்வெட்டு! சகோதரர்கள் இருவர் படுகாயம்!!

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக சகோதரர்களான இரு குடு ம்பஸ்தர்கள் மீது 20 பேர் கொண்ட குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த குடும்பஸ்தர்கள் இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவேறு கிராம இளைஞர்களுக்கிடையில் விளையாட்டு...

நாளை ஹர்த்தால் இல்லை!

முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்பு மக்களின் 30 நாள் தொடர் போராட்டத்தை அடுத்து, அந்த மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாத பட்சத்தில் வடக்குக் கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூடிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி உறுதி அளித்ததின்படி பிலவுக்குடியிருப்பு மக்களின்...

அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சிக்கு அழைப்பு: ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

அரச பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சிச் செயலமர்வை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிக்கு வருமாறு தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் ஜனநாயக போராளிகள் கட்சி இணைவு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15வது நாளாக நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக போராளிகள் கட்சியும் நேற்று(திங்கட்கிழமை) முதல் இணைந்துள்ளது. போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.பிரபாகரனின் தலைமையில் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தியுள்ளனர். நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, 2012ம் ஆண்டிற்குப்பின்னர் வெளியாகிய சுமார் 1600...

மக்களது காணிகளை பறித்து ராணுவத்திற்கு கொடுப்பதை அரசு நிறுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை பறித்து ராணுவத்தினருக்கு கொடுப்பதை அரசாங்கம் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு வாழும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று தசாப்த காலமாக காணி உறுதி அற்ற நிலையில் வாழ்ந்துவரும் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், நேற்று...

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே...

காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: அரச அதிபர்

காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும்...

இலங்கைத் தம்பதி இந்தியாவில் கைது!

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற தம்பதியினரை இந்திய கியூ பிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பா இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய தம்பதிகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக, படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில் இருவரும் திருமங்கலத்திலுள்ள...

கிளிநொச்சியில் 244 பேருக்கு பன்றிக் காய்ச்சல்! கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர்,...

தமிழரசுக் கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு! பலத்த பாதுகாப்புடன் சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், கட்சியின் உறுப்பினர்களாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர். தமிழரசுக் கட்சியில் புதிதாக இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பருத்துறை அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதன்போது, கட்சியில் புதிதாக...

முதல்வர் சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப்

நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கெஷாப், சந்தித்து குசலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் 16 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டு வன்புணர்வு: இருவருக்கு தசாப்த சிறை; ஒருவருக்கு பிடியாணை!

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (06) தீர்ப்பளித்தார். அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின்...

பாடசாலை மாணவர்களுக்கு காதில் அடிக்காதீர்!

பாடசாலை மாணவர்களுக்குப் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அவர்களின் காதுகளில், ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை மருத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் சந்த்ரா ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , "ஒருவரின் காதில், இன்னொருவர்...

கிளிநொச்சியில் கர்ப்பிணிகள், சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10.02.2017 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக...

காணிகளை விடுவிக்கக் கோரி இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாணத்தில் ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கில் முதன்முதலாக சாரதி நடத்துனர் சங்கம்

வவுனியா தனியார் பஸ்களில் பணியாற்றும் சாரதி, நடத்துனர்களை உள்ளடக்கிய சங்கமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்படும் வகையில் இந்த சங்கமானது வட மாகாணத்தில் முதன்முதலாக நேற்று உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ். ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த சங்கத்துக்கான...

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன: பத்மினி

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி...
Loading posts...

All posts loaded

No more posts