- Friday
- August 21st, 2026
வடக்கு மாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த கிராமங்களில் 2500 வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் இதற்கான 1267 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய...
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத நான்குபேர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு...
எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த...
இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 2 இலட்சத்து 60ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகி வருவதாக யாழ் கிறீன் கிறாஸ் ஹொட்டேலின் முகாமையாளரும், விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை விரிவுரையாளருமான கார்த்திகன் தெரிவித்தார். சிகரம் அக்கடமி விருந்தோம்பல் முகாமைத்துவப் பிரிவி்ன் ஏற்பாட்டில் யாழ் ஞானம்ஸ் ஹொட்டேலில் கடந்த மார்ச் 31ம் திகதி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை...
வடக்கு மாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் அவையைக் கொண்டு நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த கமலேஸ்வரன் இதனையடுத்து வடக்கு மாகாணசபை...
ஹெரோயின் என சந்தேகிக்கத் தக்கதான பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும் இதன் பெறுமதி 13 கோடி ரூபா எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அடுத்த கட்ட விசாரணைக்காக...
உத்தேச இலத்திரனியல் ஆள்அடையாள அட்டை விநியோகிக்கப்படும் வரையில் அடுத்த மே மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வரும் பழைய “லெமினேடின்” அடையாள அட்டை இந்த ஸ்மார்ட் அட்டையுடன் செல்லுபடியற்றதாக மாறுவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்....
வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரத்த வங்கி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி சுகாதார அமைச்சர் டாக்டர்...
இலங்கையர் உட்பட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மத்திய தரைக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் லிபியாவின் சப்பிரதா நகரில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 480 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகளே ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்களுள் சிறுவயது குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....
திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்றுள்ளனர்.. யாழ். புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை குறித்த வீட்டில்...
வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரதும் வரவைப் பதிவு செய்வதற்குப் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பத்தில் இருந்து நேரக்கணிப்பு இயந்திரத்தை கட்டாயம் பயன்படுத்துமாறு, வடமாகான கல்விப் பண்பாட்டலுவல்கள். விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு, ஒருமாத கால அவகாசம் தனக்கு தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 38ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புபோராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள, சுகாதார அமைச்சர்...
உள்ளூர்ச் சந்தையில் தேங்காயின் விலை, என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய் ஒன்றின் விலை, 90 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. எனினும், ஹெக்டர்கொப்பேகடுவ விவசாயம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள புள்ளிவிவரத்தின் பிரகாரம், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. சிறிய தேங்காய் ஒன்றின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த போதே ஆலய வழிப்பாட்டில் கலந்துகொண்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில்...
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...
உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவு தவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.என கலைப்பீடச் சபை வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட வகுப்புத்...
2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் மற்றுமொரு இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வவுனியா மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலையை குற்றவாளி செய்துள்ளதாக கூறப்படுகிறது
Loading posts...
All posts loaded
No more posts
