மாற்று வடிவம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

வேலைவாய்ப்பை வழங்கக்கோரி தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரை எவ்வித உறுதியான பதிலும் வழங்காத நிலையில் இன்றைய தினம் தமது பேராட்டத்தை வேறு வழியில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மனிதச் சங்கிளி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு யாழ்ப்பாண கல்விச் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் தாம் அனைவரும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போதிலும் தம்முடன் கலந்துரையாடமை குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 10ஆவது நாளாகவும் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

“2015ஆம் ஆண்டு முதல் தாம் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் தமக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எனினம் வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts