Ad Widget

அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா தொகையை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

தனியார் துறை ஊழியருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாவை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பு தொகையை சில நிறுவனங்கள் வழங்காதமை தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொழிலாளர் உரிமையை மீறும் பாரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனஹித காமி அமைப்பு இதுதொடர்பாக தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தனியார் துறையினருக்கு 2500 ரூபாவை வழங்குவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தனியார் துறைக்கு விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுவரையில் அதிகரிப்பு தொகையை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக மாவட்ட தொழில் அலுவலக அதிகாரிக்கு அல்லது நாரன்பிட்டியில் உள்ள தலைமை தொழில் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts