Ad Widget

யாழில் வேலைற்ற பட்டதாரிகள் மனித சங்கிலிப் போராட்டம்! நாளைய முக்கிய போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மனித சங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு இதுவரை அதிகாரபூர்வமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தமது போராட்டத்திற்கு தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இன்றைய தினம் அவர்கள் மனித சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப் படிப்பை நிறைவுசெய்துள்ள போதிலும் இதுவரை அவர்களால் வேலைவாய்ப்பை றெ்றுக்கொள்ள முடியாத நிலையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துமூலம் பதில் வழங்கும் பட்சத்தில் மாத்திரமே தமது போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதே வேளை நாளையதினம் வடமாகாண சபை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் காலை அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளதாகவும் இதன் போது பட்டதாரிகளால் கொடுக்கப்பட்ட பட்டத்தின் பிரதிகள் அடங்கிய தொகுதியில் பட்டதாரிகளின் கையெழுத்துகள் பெறப்பட்டு வடக்கில் உள்ள பட்டதாரிகளின் மொத்த விபரங்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதன் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு நாளை வடமாகாண சபை எதிரே வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் போராட்டத்தில கலந்து கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

Related Posts