அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம்

சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இடம்பெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றினார். சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

யாழில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை!

இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையினைக் கொண்ட முதல் நகரமாக யாழ்ப்பாணம் அமையவுள்ளது. இதற்கு உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ்நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள், முக்கிய அரச அலுவலகங்களை இணைக்கும் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப்...
Ad Widget

வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. மக்களின்...

பொதுச்சந்தைக் காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் நடத்தி வந்த சிறு வர்த்தக நிலையம், தேனீர் சாலை மற்றும் இலவச திரையரங்கு என்பவற்றை, அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். இந்தத் திரையரங்கு, வர்த்தக நிலையம் என்பன கடந்த புதன்கிழமை (05) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

இரு நாட்களாக மைதானத்தில் தங்கியிருந்த மாணவன், மாணவி கைது

வீடுகளிலிருந்து வெளியேறி, இரண்டு நாட்களாக விளையாட்டு மைதானமொன்றில் தங்கியிருந்த, சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரையும் மாணவரொருவரையும், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயதுடைய இவ்விரு மாணவர்கள் இருவரும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இவ்விருவரும், நீர்க்கொழும்பு, கடொல்கெலே பொது மைதானத்தில் தங்கியிருந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளனர்....

வர்த்தகர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது!

விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்...

கிளிநொச்சியில் கவனிப்பாரற்றுத் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 47ஆவது நாளாகவும் தொடர்கின்றது. “சுதந்திரபுரத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எனது மகன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. அவரைப்பற்றிய தகவல்கள் இதுவரை எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை” என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவர் கண்ணீருடன்...

அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து...

விமல் வீரவன்சவிற்கு பிணை

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சரீரப் பிணைக்காக குடும்ப உறவினர் ஒருவர் முன்னிலையாக...

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக...

மனச்சாட்சிக்கு தெரிந்து குற்றத்தை செய்யவில்லை: நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி வாக்குமூலம்

என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால்...

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இந் நிலையில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும்...

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பிற்கு நுாற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்?

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட...

வெளியில் வந்தவுடன் வெட்டுவேன்! : ஊடகவியலாளர்களை மிரட்டி கொலை சந்தேக நபர்!!

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம், நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம்...

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடிய கான்ஸ்டபில் வசமாக சிக்கினார்

கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச் சங்கிலி 85,000 ரூபா பெறுமதியானது எனத் தெரியவந்துள்ளது. இதனை கொள்ளையிட்டு தப்பி ஓடிய வேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பூங்கா பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழுவினர், சந்தேகநபரை மடக்கிப்...

பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக 34 ஓட்டங்களுக்கு 03...

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பலி

வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா (வயது 34) என்ற குடும்பஸ்தர் நீரிழ் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். காரைநகர் - ஊரி கடற்கரையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான இவர் வியாழக்கிழமை அதிகாலை 5.30 அளவில் ஊரி கடலிற்கு வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்தநிலையில், 10.00 மணி ஆகியும் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts