- Wednesday
- May 13th, 2026
கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவர் சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு தெரிவித்த மக்கள் கெடந்த முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் கேப்பாபுலவு...
தூக்கில் தொங்கி இறந்ததாக தெரிவித்து சிறுவன் ஒருவனது சடலம் நேற்று மதியம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை வடக்கைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது சுருக்கிட்டு கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன் தயான் விசாரணைகளை...
யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3 பேர் அடங்கிய குழுவினர் திரைப்படம் பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது திரைப்படம் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெறுவதற்கு வந்தவேளை, திரைப்படம் ஆரம்பித்து விட்டதாகவும்...
பிரிட்டனில் அகதி அந்தஸ்துப் பெற்றுப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் உத்தியோகபூர்வ மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் புதிய கொள்கை அல்லது நடைமுறை ஒன்றினை உள்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. பிரித்தானிய உள்துறை அலுவலகத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கை அல்லது நடைமுறையின் பிரகாரம் பிரித்தானியாவில் முதன் முதலாக அகதி அந்தஸ்துப்பெற்று ஐந்து வருடங்களின்...
கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, நான் பின்வரும் ஒத்திவைப்புப் பிரேரணயை சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பாக உரையாற்றுகிறேன்: “2009 அம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, தனிப்பட்ட பிரசைகளுக்குச் சொந்தமான பொருந்தொகைக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்தமையினால்: இக்காணிகளுள் பெரும்பாலானவை பாதுகாப்புக் காரணங்களுக்காக குடிமக்களிடமிருந்து இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டன. உதாரணமாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன்துறை,...
ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழக்கும் நடவடிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சிவில் சமூக ஊடக...
வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்குபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் வடமாகாண பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் கொண்ட குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், அஸ்வின்...
யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது
அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...
தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன் மனைவி மீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அவசரமாகக் கூடும் கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது...
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள். எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே தவிர, அவர்களது கோரிக்கைகள்...
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் கைதுசெய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள்...
முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் புகையிரதமும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி அதிஸ்டவசமாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். ஸ்கந்தபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை...
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் தெற்காசிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
தமிழ் சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கூட்டு மனுவின் தமிழ் வடிவம்.. இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம். தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின்,...
பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பை சேர்ந்த தந்தையும் மகளும் நேற்று (புதன்கிழமை) மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
