- Wednesday
- May 13th, 2026
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. குறித்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு...
களுத்துறை , அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக கருதப்படும் அழகுக்கலை நிபுணர் மற்றும் அவரிடம் மாணவர்களை அழைத்துச் சென்ற நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாணவர்களின்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டியவாறு பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரில் அரச நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று 21 ஆவது நாளாகத் தொடரும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடுக்கப்பட்ட எமது தொழிலுரிமை எனும் தலைப்பில்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண...
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1,652 இலட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (வியாழக்கிழமை) நாளைமறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை...
தடம் மாறிச் செல்லும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கடமையென வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வி துறையையும் வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது....
இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர்...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ஜெனிவா கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அங்கு சென்று இரகசியமாக ஒத்துக் கொண்ட தீர்மானத்தை, ஐனநாயகத் தீர்மானமாக மக்கள் மத்தியில் காட்டுவதற்கான நாடகமாகத் தான், வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் அமைந்துள்ளது” என, குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, இந்த நாடகத்தை முதலமைச்சரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருப்பதாக கூட்டிக்காட்டியுள்ளது. சம்மந்தன், சுமந்திரன்...
“நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என, நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சமாசத்தலைவர் கி.அருள்ஜீவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நெடுந்தீவு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள், தமது தொழில் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கச்சதீவுக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால், இந்திய...
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு குழுவில் குறித்த இரண்டு பொருட்கள் தொடர்பிலும் நுகர்வோரின் தேவைப்பாடு, இறக்குமதி விலை மற்றும் சந்தை விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு...
பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த காலநிலை ஏப்ரல் மாதம் வரையில் தொடரவுள்ளது. எனவே பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலேயே அதிகளான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது....
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள் இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்.ஊடக மையத்தில்...
மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே...
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர். காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி...
வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை...
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து...
கடந்த 20 வருடங்களாக வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சாவடியாக காணப்பட்ட வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாளப்படுத்தினர். 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியை அபகரித்து இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ்...
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
