Ad Widget

பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்தருக்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1,652 இலட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (வியாழக்கிழமை) நாளைமறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்து அதற்கான அறிக்கையொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விசாரணையை முன்னெடுக்கவே முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அறிக்கை, பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Posts