- Wednesday
- June 17th, 2026
வவுனியா மாவட்ட அரச வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதி நிதி தெரிவித்துள்ளார். இப்பதிவானது தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி...
வேகக்கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி (மினிபஸ்) வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தியில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் நேற்று காலை 7.40 மணியளவில் மானிப்பாய் வீதி சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் மாதகல் துறைமுகத்தை...
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடாதிபதிகள் இதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக...
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும் என வௌிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். எரிஸ் – 13 எனும் கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்...
தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மதனவாசனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமக்கு பாதிப்பு ஏற்படுமா...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையானது, இம்முறையும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இந்த வரைவுக்கு...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என யாழப்பல்கலைக்கழக முகாமைத்து பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டம் நேற்று பதினேழாவது நாளாக நடைபெற்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகளுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்வதற்கு அரசமைப்பில் எந்தவித தடையும் இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்காவின்...
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே காணாமல் போனவர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம். எப்படியிருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடிக்...
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஏரிஸ் 13 என்ற பெயரைக்கொண்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சோமாலிய கடற்படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்த போதிலும் கப்பம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் நேற்று (17) வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டை மீள்நல்லிணக்கத்தின் ஊடாக ஏற்படுத்தல் என்ற புதிய கருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். தொழில் முயற்சியில் வடக்கைத் தெற்குடன் இணைக்கும் மீள்நல்லிணக்கத்தின் ஊடாக...
கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நீதிபதி அத தொடர்பில் குறிப்பிடுகையில் , ஆலயத்தில்...
போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த எட்டு பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு இலங்கையர்களும் போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இலங்கையர்களுடன் நான்கு பிரித்தானியர்களும்...
சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, சுமணன் எனும் இளைஞனின் உடலில் 06 வெளிகாயங்களும் 16 உள்காயங்களும் காணப்பட்டதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யபப்ட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்...
வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த 5 மாணவர்கள் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுச் சம்பவம் நேற்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,பாடசாலையில் நடைபெற்ற வாய்த் தகாராறு ஒன்றின் நிமித்தம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த...
கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட வீதிப் பரிசோதனையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இ.போ.ச பேருந்தில் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது....
சுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும். இலங்கை அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மா னத்தைத் தெளிவாக நிராகரித்துள்ள நிலை யில் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
நாட்டிலுள்ள சில ஹோட்டல்களுக்கு சென்று சமையல் செய்வதனைப் பார்த்தால், அந்த ஹோட்டலில் உணவு உண்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவ்வாறான ஹோட்டல்களில்சமைக்கும் உணவுகளை உண்பவர்கள் இதுவரையில் உயிர்வாழ்வதும் பெரிய ஆச்சரியமான ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
