- Tuesday
- June 16th, 2026
தாம் எதற்காக அழைத்து வரப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில், வந்த சிலரால் “வடமாகாண கலைஞர்கள்” என்றப் பெயரில் , யாழ். நல்லூர் முன்றலில் பிற்பகல் 3 மணியளவில் நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், “ஈழத்து கலைஞர்கள்,...
இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும்...
இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சி பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி சிறிது தூரம் ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து வாகனங்களில் கிளிநொச்சி நகருக்கு வருகை தந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி...
வல்வெட்டித்துறை பகுதியில் 2kg கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் போதைபொருள் கொண்டுவரப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமைகத்தினால் 20,000 ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்...
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள்...
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை வைத்திருந்தவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே, இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாரான நிலையிலேயே, 16.5 கிலோ தங்க கட்டிகள்...
நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஈழத்து கலைஞர்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம், யாழ்.நல்லூர் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. லைக்கா நிறுவத்தினர் சார்பில்...
பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்றும் அதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை...
இலங்கை அரச போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றிய கனகலிங்கம் காண்டீபன் என்பவர் மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட அவர் இன்று (திங்கட்கிழமை) மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். இலங்கை அரச போக்குவரத்து...
சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதி சிரமதானம் மூலம் நேற்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இச்சிரமதானத்தின்போது நகர இளைஞர்கழகத்தினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலையின் ஒருபகுதியை துப்பரவு செய்தனர். இந்தச் சிரமதானச் செயற்பாடு தொடா்பாக நகர இளைஞா் கழகத்தின் செயலாளா் மு.கோகுல்ராஜ் கருத்துத் தொிவிக்கையில்... வைத்தியசாலையில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தி தூய்மையாக்குவதில்...
எமது பாடசாலை வரலாற்றுப் பாட நூல்களில் இந்த நாட்டு தமிழ் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதையும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்று பாடங்களே தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படுவதையும், தமிழ் வரலாற்று வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்தோர் மொழி பெயர்ப்பாளர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்பு நோக்குவோராகவும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர்...
சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம் ஆண்டில் வரும் முதலாவது டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனவே தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுச் சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரலாற்றில் இல்லாத பாரிய டெங்குநோய்த் தாக்கத்திற்கு நாடு...
2017 ஆண்டு இதுவரையானக் காலப்பகுதியில் 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் காச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்குஅவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும்...
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 26 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக...
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 8 ஆம் திகதி வவுனியா பாசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து, களவாட முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 69...
இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்....
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, மேலதிக தாமதங்களின்றி நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இது குறித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி...
Loading posts...
All posts loaded
No more posts
