சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதி சிரமதானம் மூலம் நேற்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இச்சிரமதானத்தின்போது நகர இளைஞர்கழகத்தினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலையின் ஒருபகுதியை துப்பரவு செய்தனர்.
இந்தச் சிரமதானச் செயற்பாடு தொடா்பாக
நகர இளைஞா் கழகத்தின் செயலாளா் மு.கோகுல்ராஜ் கருத்துத் தொிவிக்கையில்…
வைத்தியசாலையில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தி தூய்மையாக்குவதில் இழுபறி நிலை காணப்படுவதாக பத்திரிகையூடாக அறிந்தோம். இதனையடுத்தே எமது சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினூடாக சிரமதானம் செய்ய முடிவெடுத்தோம்.
இது எங்கள் வைத்தியசாலை இதனை சிறப்பாக செயற்பட நாம்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் யாரையும் எதிர்பார்த்து நாம் இருக்கக்கூடாது. எதிர்வரும் காலங்களில் நாம் இவ்வாறு தொடர்ச்சியாக வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம் என்றாா்.
இச்சிரமதான பணியில் இளைஞர்களோடு கலந்துகொண்டிருந்த வைத்தியர் ரி.குகதாஸன் கருத்து வெளியிடும் போது…
சாவகச்சேரி நகர இளைஞர் கழகம் முன்னுதாரனமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலை, பாடசாலை, பொதுச்சந்தை ஆகியன ஒரு இனத்தின் முக்கியமான கட்டமைப்புக்களாகும். இவற்றை இவர்கள் போன்ற இளைஞர்கள் முன்னின்று வளர்த்தெடுக்க வேண்டும். இன்று இளைஞர்கள் இவ்வாறான சமூகம்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கப்பட வேண்டும்.
சாவகச்சேரி நகர இளைஞர்கழகத்தினர் தாமாக முன்வந்து செயலாற்றுகின்றமை எல்லோருக்கும் ஓர் முன்னுதாரணம் என தெரிவித்தார்.
