அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை முகாமையாளராக காண்டீபன் நியமனம்

இலங்கை அரச போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றிய கனகலிங்கம் காண்டீபன் என்பவர் மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட அவர் இன்று (திங்கட்கிழமை) மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஏ.ஜே.லெம்பேட் என்பவர் மன்னார் சாலைக்கு முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தும், குறித்த நியமனத்தில் கடமையை பொறுப்பேற்க முடியாத வகையில் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் காணப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் கடமையாற்றிய ஒருவர் தற்போது மன்னார் சாலை முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts