Ad Widget

ஏழு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 26 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் இம் மக்கள் மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts