நாட்டில் புதுவகையான வைரஸ் காய்ச்சல்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

இன்புளுவன்சா AH1N1 காய்ச்சலுக்கு சமாந்தமரமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார இதனைக் கூறினார். இந்த வகை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும்...

நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்!

இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் நீல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதில், அதிகமானோர் சிசிக்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளார். மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மனநோய், இருதய அடைப்பு,...
Ad Widget

முக்கொலைகளையும் நானே செய்தேன்!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா....

அச்சுவேலி முக்கொலை ; இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. சாட்சியப்பதிவில் கொலை சம்பவத்தில் தடயப் பொருள் ஆய்வினை செய்த யாழ்.சோக்கோ பொலிஸ் பிரிவில் சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடமையாற்றியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியமளித்தார்....

யாழ். மாட்டத்திற்கு அரசிடம் இருந்து புதுவருட பரிசு

யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாறாக பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு குறைக்கப்படும் ஒருவரது சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும். யாழ்ப்பாண...

எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாரில்லை: ஜனாதிபதி

தாய்நாட்டுக்காக போராடிய எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி...

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர்....

சாதாரணதர பரீட்சை மீள் திருத்த விண்ணப்பங்களுக்கான கால எல்லை அறிவிப்பு!

நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்யக் கோருபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ட்பளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலை அதிபருடாக விண்ணப்பிக்குமாறும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தேசிய பத்திரிகைகளில் விரைவில் வெளியிடப்படவுள்ள மாதிரி விண்ணப்பப்படிவங்களுக்கு அமைவாக...

இன்று முதல் ஒரு வாரத்துக்கு டெங்கு ஓழிப்பு வாரம்

இலங்கையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் 3 மாத காலப்பகுதியில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 24 ஆயிரத்து 600 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு என சந்தேகிக்கப்படும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார...

இன்று காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தம்

இன்றைய தினம் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் சேவை சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது. இன்று காலை 08 மணி முதல் நாளை காலை 08 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் அஜித் பி திலகரத்ன கூறினார். எவ்வாறாயினும் அவசர மற்றும் அத்தியவசிய...

8,000 பேர் 9 ஏ சித்திகள்; கணிதப் பாடத்தில் சித்தியடைந்த வீதமும் அதிகரிப்பு

நேற்றைய தினம் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8,224 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 6,102 மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்ததாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63...

ரவிராஜ் கொலை வழக்கு; விடுலையான கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறந்து விட்ட நிலையிலும், இருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் வழக்கில் சமூகமளிக்காத...

உயர்தரத்திற்கு தகுதி பெற்ற ஒன்றரை இலட்சம் மாணவர்களுக்கு “டெப்“

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள், 1,75,000 பேருக்கு டெப் கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு முதலாவதாக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும்...

இலங்கை பிரஜைகளுக்கான அடிப்படை சம்பள அறிவிப்பு விரைவில்!

ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் பற்றிய அறிவிப்பு முன்வைக்கப்படும் என்றும் அவர்...

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச்...

முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் இன்றும் (புதன்கிழமை) முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மக்களை நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, அவர்களது நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்....

வடக்கு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்: மங்கள

யுத்தத்தினால் துன்பப்பட்ட வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவே இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘உண்மையில் சர்வதேச நீதிபதிகளை அழைக்க காரணம் என்ன? எமது...

ஒற்றுமையின் தேவைக்காக மௌனமாக இருக்கின்றோம்; உரிய நேரத்தில் பதிலளிப்போம்

சாவகச்சேரி சங்கத்தானையில் நடைபெற்ற மண்டப திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசுக் கட்சி வெளியேறவேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெரிவிப்பது கொப்பில் இருந்துகொண்டு அடிமரத்தை...

இராணுவம் ஒத்திகை : காங்கேசன்துறையில் மக்கள் பதட்டம்!

மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என...

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே! : வடக்கு முதல்வர்

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார். சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வரும் டொக்டர் சூரியா குணசேகரவினால் ஊடகம் ஒன்றின் ஊடாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts