- Wednesday
- May 13th, 2026
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சில மாணவர்களினால் பல்கலைக் கழக கட்டிடத்தின் கண்ணாடிகள்...
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால்...
காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை அறிவதற்காய் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்...
நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை...
போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ .வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். அந்த...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 30...
யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஸ்ரீலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு படைகளின் தலைமையக தளபதியாக கடந்த இரண்டு...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நேற்று மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா பணம் பறிபோயுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும். மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும். முதலாம் வருட மாணவர்களின் வரவேற்புபசார நிகழ்வில் (10.03.2017 மற்றும் 11.03.2017) ஏற்பட்ட அசாதாரண நிலமைகளின் காரணத்தினால் மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றற்செயற்பாடுகள் தற்காலிகமாக...
முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும்...
தாம் எதற்காக அழைத்து வரப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில், வந்த சிலரால் “வடமாகாண கலைஞர்கள்” என்றப் பெயரில் , யாழ். நல்லூர் முன்றலில் பிற்பகல் 3 மணியளவில் நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், “ஈழத்து கலைஞர்கள்,...
இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும்...
இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சி பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி சிறிது தூரம் ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து வாகனங்களில் கிளிநொச்சி நகருக்கு வருகை தந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி...
வல்வெட்டித்துறை பகுதியில் 2kg கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் போதைபொருள் கொண்டுவரப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமைகத்தினால் 20,000 ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்...
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள்...
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை வைத்திருந்தவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே, இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாரான நிலையிலேயே, 16.5 கிலோ தங்க கட்டிகள்...
நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஈழத்து கலைஞர்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம், யாழ்.நல்லூர் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. லைக்கா நிறுவத்தினர் சார்பில்...
பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்றும் அதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை...
Loading posts...
All posts loaded
No more posts
