புலிகள் எரித்துப் படுகொலை; இராணுவத்தினருக்கு அதிகுற்றச்சாட்டுப் பத்திரம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

ஜனாதிபதி மற்றும் பிரதமர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த போதே ஆலய வழிப்பாட்டில் கலந்துகொண்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
Ad Widget

வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வட மாகாண முதலமைசரால் ​நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...

இலங்கை பாதுகாப்பு பிரிவை எச்சரிக்கின்றது அமெரிக்கா!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில்...

மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு: யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...

மாணவர்களின் ஒழுக்க மீறல்களை நியாயப்படுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்துவது பொது அக்கறைக்கு குந்தகம்

உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவு தவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.என கலைப்பீடச் சபை வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட வகுப்புத்...

இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் மற்றுமொரு இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வவுனியா மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலையை குற்றவாளி செய்துள்ளதாக கூறப்படுகிறது

மன்னார் குரு முதல்வர் தலைமையிலான பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

மன்னார், முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தலைமையில் சென்ற ஆயர் இல்ல பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுனர் ரெஜீனோல்ட் குரேவிற்கும் இடையில் இந்த...

மஹிந்த அணிக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

கொழும்பு காலி முகத்திடலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அத்தோடு, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மக்கள் இலகுவாக செல்வதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒன்றிணைந்த எதிரணியின்...

தொடர் அழுத்தங்கள் சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்: சிவாஜிலிங்கம்

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் தொடர்ந்து குரல் கொடுத்து அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என வட. மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் சிவாஜிலிங்கம் கலந்துக் கொண்டிருந்த நிலையில், குறித்த விஜயம் தொடர்பில் யாழில் நேற்று...

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் சர்வதேசத்திடம் அடிபணிந்துள்ளோம்: சம்பந்தன்

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால், சர்வதேசத்திற்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் ஆரம்பமான ‘யொவுன்புர’ இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த...

விடுவிக்கப்படும் காணிகள் எம்முடையதல்ல; கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம்

முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று 32 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

30 இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று ஊர்காவல்துறை பதில் நீதவான் ஆர்.சபேசனினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் அனைவதும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை வழங்கியமைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக...

யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை!!

“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும்...

வெள்ளைநிற பாடசாலை சீருடைக்கு பிரியாவிடை!

பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதற்காக, நான்கு அல்லது ஐந்து நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தனது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை,...

11 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை!

நாடு முழுவதிலும் தற்போது டெங்கு நோய் பரவி வருகின்ற நிலையில், 11 மாவட்டங்கள், டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாகப் பதியப்பட்டுள்ளன என்று, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களே, இவ்வாறு எச்சரிக்கைக்குரிய மாவட்டங்களாக...

உண்ணாவிரதமிருந்த மாணவர்களில் இருவர் மயக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் வியாழக்கிழமை (30) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (31), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்தவர்களாவர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து...

கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர்...

யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்தவும் : ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடிகான் கட்டமைப்புக்களும், நீர்த்தேக்கங்களும் முறையான தராதரத்துடன் பாராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. யாழ் நகரின் அழகை தொடர்ந்தும் பேணுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்....

வரட்சியினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலையினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வரட்சியுடனான காலநிலையினால் 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 66 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வரட்சியுடனான காலநிலையினால் வட மாகாணத்தில் ஒரு லட்சத்து...
Loading posts...

All posts loaded

No more posts