யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று ஊர்காவல்துறை பதில் நீதவான் ஆர்.சபேசனினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் அனைவதும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை வழங்கியமைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதுரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் மீனவர்கள் விரைவில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அதேவேளை, மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மீனவர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.