ஜனாதிபதி மற்றும் பிரதமர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த போதே ஆலய வழிப்பாட்டில் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கோவில் நிருவாகத்தினரால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டளர்.

Related Posts