வடக்கு முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்கிறது கத்தோலிக்க திருச்சபை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் இயேசுக்கிறிஸ்துவை விமர்சித்து கருத்து வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிறேமானந்த சுவாமியுடன் இயேசுவை ஒப்பிட்டு, வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வி தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்...

‘நித்தமும் கண்ணீருடன் வாழும் எமக்கு உதவுங்கள்’ : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை நினைத்து தினமும் கண்ணீருடன் வாழும் தமக்கு, தமது உறவினர்களின் நிலை தொடர்பில் அறிவிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 58வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள...
Ad Widget

சிறுபான்மையினத்தவர் மீது கொலை வெறித்தாக்குதல்

பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை!, அது இந்தியாவின் போர் : மஹிந்த

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது என்னுடைய யுத்தம் மட்டும் அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச்...

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: சுவாமிநாதன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ள நாட்டில் இடம் பெற்ற...

பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை: கோத்தபாய ராஜபக்ச

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை....

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கள விஜயம்!

வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகத் தயங்கோம்!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின்...

கரவெட்டியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம் மாதத்தின் 15 நாட்களில் 44 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் 120 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. கரவெட்டி மத்தி, துன்னாலை மற்றும் கரணவாய் பகுதிகளில்...

ஜனாதிபதி நயினாதீவு விஜயம்

நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இருப்பினும் நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றய தினம் ஜனாதிபதி நயினாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற...

இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனமா?

இலங்கைக்குள் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வௌியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. சிகரெட் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது சங்கம் நிபந்தனைகளற்ற ஆதரவளித்துள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் நலிந்த சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். இது இவ்வாறு இருக்க, இலங்கைக்குள்...

பாதுகாப்பு செயலாளருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு

வடப் பகுதியில் இராணுவம் நிலைக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மன்னார் - முள்ளிக்குளம், முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மற்றும் யாழ்ப்பாணம்...

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில்...

அதிகரித்துவரும் வெப்பம்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார். அதிகரித்து வருகின்ற காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்றும் குறிப்பாக, காடழிப்பு மற்றும் அதிகரித்த வாகனங்களின் பாவனை, நீர் வீண்விரயோகம் போன்ற காரணிகள் வெயில் அதிகரித்தமைக்கான காரணம்...

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மக்கள் மயப்படுத்தபடவுள்ளது!

தமது கவனயீர்ப்பு போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மக்கள் மயப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இன்றைய தினம் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முற்றத்திலே முழங்கிவிட்டு உள்ளே போய் பழைய பிணங்களுக்கு வியர்க்ககூடாதென்று விசிறி தேடாதீர்கள் என்றும் தங்களுக்காக போராடுங்கள் என்றும் அரசியல்வாதிகளுக்கும் வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு...

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்துவைப்பு

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆயரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படையினரால் கடந்த மாத இறுதி பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்...

இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டின் சகல பகுதிகளிலும் தீவிரமாக பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்கு, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை...

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவரைத் தேடும் வேட்டை தொடர்கிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அந்த அணியைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து மீண்டும் நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளனரா என்பது பற்றி தாம் பல கோணங்களில்...

எமது காணிகளை இராணுவத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை: சம்பந்தன்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த காணிகளை நாம் எக்காரணங்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும்....

இலங்கையில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது!

நாட்டின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி வெலிகம பிரதேசத்திலிருந்து 1512 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts