Ad Widget

எமது காணிகளை இராணுவத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை: சம்பந்தன்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த காணிகளை நாம் எக்காரணங்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும். இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மக்களின் சொந்த நிலங்கள். அரசாங்கத்தினது அபிவிருத்தித் தேவைகளுக்கு வேண்டுமானால் அக்காணிகள் குறித்து நாம் பரிசீலிக்க முடியும்.

உதாரணமாக விமான நிலைய விஸ்தரிப்பு சம்பந்தமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அதையே காரணம் காட்டி மக்களது அனைத்து காணிகளையும் விடுவிப்பதில் தாமதிக்க வேண்டிய அவசியமில்லை. குறித்த காணிகள் முற்றாக விடுவிக்கப்படும்வரை எமது நடவடிக்கைகள் தொடரும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Related Posts