இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ள நாட்டில் இடம் பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம் இலங்கையின் நீதித்துறையில் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் நாட்டின் மறுசீர் அமைப்பு விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் இருந்து ஐந்து ஆயிரம் ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.