கிளிநொச்சியை சிறந்த நகரமாக மாற்றுவதற்கு இராணுவம் தடையாகவுள்ளது: சிறிதரன்

கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கடுமையான...

நீரில் மூழ்கும் அபாயத்தில் பாராளுமன்றம்!

தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்ற நுழைவாயில் பகுதிகளில் மணல் மூட்டைகளை நிரப்பி கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை சற்று குறைவடைந்துள்ளதால் தியவன்னா ஓயவின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இன்றும், நாளையும் மழை...
Ad Widget

இயற்கை அனர்த்தம்: எட்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட...

புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி, எதிர்வரும் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள், இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

அனர்த்த உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண காலநிலையினால், ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 104 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்

தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84 ஆவது வயதில் நேற்று பிற்பகல் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பகல் ஒரு மணியளவில் காலமானார்.

பல்கலைக்கழக உள்ளீர்ப்பின் போது தகுதியான மாணவர்கள் விடுவிப்பு

“வருடாந்தம், பல்கலைக்கழக தகுதி பெறும் 2,500 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை” என்று, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனநெத்தி தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாட்டு தொடர்பாக விசாரணை செய்த போதே, இது தொடர்பாக தெரியவந்ததாக, அவர் தெரிவித்தார். “பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இரண்டாவது முறை மற்றுமொரு தெரிவு நடைபெறும். ஆனால்,...

வடக்கு பல அபிவிருத்தி பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளது

கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை, குளங்கள் புனரமைக்கப்படாமை, நன்னீர் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையாமை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நிலையில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட...

மோரா (MORA) சூறாவளி வலுவடைந்துள்ளது

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா (KOLKATA) நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் (CHITTAGONG)...

திருகோணமலையில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்!! இளைஞர்கள் நால்வர் கைது

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டி வைக்கப்பட்ட இளைஞர்களை பொலிஸார் மீட்டதுடன் அவர்களை கைது செய்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய...

இராணுவத்தால் வடக்கில் பெண்கள் படும் அவலத்தை நாம் அறிவோம்: மாவை

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து ஆடை தொழிற்சாலைக்கு உங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்ட போதும் தாம்...

கடந்த ஆட்சியில் இருந்த அடக்குமுறை நல்லாட்சியில் இல்லை: விஜயகலா

நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; ’நாட்டில் கடந்த கால யுத்தத்தின் காரணமாக இன்றும் கூட...

அதியுயர் ஆபத்து வலயங்களாக 8 மாவட்டங்கள் பிரகடனம்!

நாட்டின் அனர்த்தநிலை காரணமாக 8 மாவட்டங்கள் அதியுயர் ஆபத்து வலயங்களாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இரத்தினபுரி,கேகாலை,காலி,களுத்துறை,மாத்தறை, அம்பாந்தோட்டை,கண்டிமற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பது ஆபத்தானது என்றும், அடுத்துவரும் நாட்களுக்கு குறித்த பகுதி மக்கள் மிகவும்...

வித்தியா கொலை வழக்கு: ட்ரயல் அட் பார் நீதிபதிகள் விசேட சந்திப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ட்ரயல் அட் பார் நீதிபதிகள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி படுகொலை வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் நடத்துவதற்கு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் பரிந்துரை வழங்கியிருந்தமைக்கு அமைவாகவே இவ்வழக்கு விசாரணை குறித்துக்...

Want to find a date? Here’s where Tinder says you should work

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

Burger King upsets actual king with Belgian ad

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

There’s more to worry about at Etsy than just canceled internships

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சியும் வர்த்தக தொழில்ற்துறையினருக்கான செயலமர்வும்

CTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதுதொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்கள்...

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்: இரகசிய உடன்படிக்கை கைச்சாத்து

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும்- அமெரிக்காவிற்கும் இடையே இரகசிய உடன்பாடொன்று கையெழுத்தாகியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதன்படி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் குறித்த கடற்படை தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்காவிடமிருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர்...
Loading posts...

All posts loaded

No more posts