- Thursday
- May 21st, 2026
நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்த புகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீதுபட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இராணுவ சிப்பாய்...
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டிவைக்கப்பட்டது. நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...
யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்த கிளிநொச்சியில் யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. குறித்த நீர்ததாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால், கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளது. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும்...
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ்.மாவட்ட வானிலை...
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உடனடியாக இந்திய அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....
நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் 5 இலட்சத்திற்கும்...
ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த பெண் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தியில் கடந்த வாரம் தனியார் பேருந்து ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மெலிஞ்சிமுனை...
வௌ்ள அனர்த்தம் காரணமாக, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த பரீட்சையை நடத்துவதற்கான மற்றுமொரு தினம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், விரைவில் பரீட்சை தினத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள் அனர்த்த நிலை தொடர்பில்,...
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய 011-2136226, 011-2136136 அல்லது 077-3957900 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொண்டு முகம் கொடுத்துள்ள அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய மலை...
அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரிக்கை...
சீரற்ற காலநிலை இதுவரையில் 28 பேரின் உயிர்களை பறித்துள்ளது. கடும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. புளத்சிங்கள போகஹாவத்த...
வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது என வடக்கு சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கியநாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி...
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடத்த தடை விதித்து வடமாகாண சபையில் புதிய நியதி சட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்க உள்ளது. வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே...
வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய 'ட்ரயல் அட்பார்' முறையில் இடம்பெறவுள்ளது. குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 93ம் அமர்வு நேற்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த சம்பவத்திற்கு கண்டனத்தை...
லங்கையின் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
யுத்தத்தின் பின்னர் அகதிகளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்த எவ்வித தகவல்களும் இல்லையென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த போதே, அமைச்சர்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
