- Thursday
- May 21st, 2026
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்பாட்டு அழிப்பு முதல் அதன் பின்னரான இன அழிப்பு வரை, அவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ். பொது நூலக முன்றலில்...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான நேற்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள...
காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர். காணாமலாக்கப்பட்டவர்கள் எந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் தெரியப்படுத்தினால் அங்கு தாம் அழைத்துச் செல்வதாக அண்மையில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அதனையே நானும்...
தெற்கில் வெள்ளத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் வடமாகாணத்தில் வறட்சியினால் மக்கள் அதிளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியின் காரணமாக வடமாகாணத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து 40ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த இடர்முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி...
வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். காயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. 6 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த உதவி திட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். இது விடயம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்....
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருட காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையப் பயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க, சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். புனர்வாழ்வு நிலையத்தில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க யாழ். மக்கள் முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும், அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மற்றும்...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன்...
யாழ்.பொதுநூலக எரிப்பின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. யாழ். பொதுநூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை ) மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு. “இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாகப் பண்பாட்டுப் படுகொலை” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்...
தமிழினத்தின் வரலாற்றுப் பதிவுகளின் ஆதாரமாக, தலைநிமிர்ந்து மிடுக்குடன் காணப்பட்ட யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் 38. தெற்காசியாவின் மாபெரும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம், கடந்த 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு எரியூட்டப்பட்டு, மறுநாள் அதாவது இதே போன்றதொரு நாளில் காலை வேளையில் நிறம் மாறி, உரு மாறி...
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 110 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் 153 ஆயிரத்து 382 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தையிட்டி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்த பெருமளவு வெடி பொருட்கள், கிணற்றுடன் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை (28) முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில், பெருமளவு வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கிணறு காணப்பட்டது. கிணற்றிலிருந்த வெடி பொருட்களை ஹலோ ட்ரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமும், படையினரும் இணைந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு...
யாழ்ப்பாணம், இராசவீதி கோப்பாய் பகுதியில், திருமண வீட்டில் இருந்து 9 பவுண் தங்க நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருட்டு போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளததக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியில் உள்ள வீட்டில், சனிக்கிழமையன்று திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், திருமண...
திருகோணமலையில் நடைபெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றக் கட்டளையைக் கிழித்து எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் சார்பில், நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய எம்.ஏ.சுமந்திரன், இவ்வழக்குத் தொடர்பில் தெரிவிக்கையில், “நீதிமன்றுக்கு வெளியில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விக்குட்படுத்தும் நியாயாதிக்கம், நீதவான் நீதிமன்றுக்கு இல்லை. இதனடிப்படையில், கைதுசெய்யப்பட்ட...
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (29) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ்மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை நேற்று நடாத்தியுள்ளது.
இதன் முதல் அமைர்வின் போது இந்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில்...
வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த ‘மோறா’ சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் பகுதிக்குள் நிழையும் எனவும் இதன்காரணமான இலங்கைக்கு பதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, மேகம் மூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு...
Loading posts...
All posts loaded
No more posts
